மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இன்று(03) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

மகிழடித்தீவைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்து சம்பவதினமாக இன்று காலை 7 மணிக்கு மீன்பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை அவரை தூக்கி வீசியத்தில் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை