பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ள வெப்பவலயங்களுக்கு இடைப்பட்ட ஒடுங்கும் வலயத்தின் (ITCZ – வட அரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசுகின்ற காற்று ஒன்றிணையும் பிரதேசம்) தாக்கம் காரணமாக, தற்போதைய பலத்த மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை:-

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. 
தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை