வேட்டைக்காரர் ஒருவருக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை

உடவலவ தேசிய பூங்காவில் வேட்டைக்காரர் ஒருவருக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.

நேற்று திபிரிம்கங்கட பூங்காவிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் வேட்டைக்காரன் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், வனவிலங்கு அதிகாரிகள், வேட்டைகாரர் வசம் இருந்த துப்பாக்கி மற்றும் மான் கறியை கைப்பற்றியுள்ளனர்.
புதியது பழையவை