பெற்றோருக்கு இடையிலான சண்டையில் - சிறுவன் உயிரிழப்பு


மாத்தறை கொஸ்மோதர, வரல்ல,உவரகல பிரதேசத்தில் நேற்றிரவு கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடந்த சண்டையில் அவர்களின் 9 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரண்டு பேருக்கும் இடையிலான சண்டையின் போது சிறுவனின் தந்தை, தாயை கத்தியால் தாக்கிய போது, கத்தி எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் பட்டுள்ளது.

இதனால், படுகாயமடைந்த சிறுவன் மொரவக்க-கொஸ்னில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நிறுவனின் தந்தை மாத்தறையில் பிரபல இசைக்குழு ஒன்றின் நிரந்த பாடகர் என கூறப்படுகிறது. சந்தேக நபரான தந்தையை மொரவக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை