இராணுவத்தினரால் கடந்த 2008ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01-11-2022) யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவபடத்திற்கு முன்பாக பல்கலை மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.