2023 வரவு -செலவுத் திட்டம் அமைச்சரவையால் அங்கீகாரம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் நிகழ்த்தப்படும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்றாவது வாசிப்பு விவாதம் அல்லது குழு நிலை நவம்பர் 23 முதல் டிசம்பர் 8 வரை நடைபெறும்.

2023 வரவு -செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெற உள்ளது.
புதியது பழையவை