பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கபப்ட்ட மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு ஒவ்வாமை
குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் நிலைமைகளை கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்லையில் , உணவு ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள திடீர் சுகயீனமடைந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
புதியது பழையவை