மட்டக்களப்பில் அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் 50வது வீடு வழங்கிவைப்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பலாச்சோலை கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா அவர்களது முற்றிசியினால்இ கனடா நாட்டில் வசிக்கும் ஐயப்பன் பக்தர்களின் நிதிப்பங்களிப்பில்இ ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த வீடானது அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 09இலட்சம் ரூபா பெறுமதியான தொகையில் இவ் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதுடன்மிகவும் நேர்த்தியானதும் வசதியான முறையிலும் குறித்த வீடு மிகவும் குறுகிய நாட்களுக்குள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள 50வது இவ் வீட்டினை உத்தியோக பூர்வமாக வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இன்று காலை இடம்பெற்றது.

அமிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன் அவர்களும் அமிம்சா சமூக நிறுவனத்தின் நிறைவேற்றுச் செயலாளர் ராஜ்மோகன் பலாச்சோலை கிராமசேவையாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்இ சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் கிராம மக்களும் கலந்துகொண்டருந்தனர்.

இதே வேளை அதிதிகள் மற்றும் பயனாளியான கந்தையா மனோரஞ்சிதம் குடும்பத்தினர் இணைந்து உத்தியோக பூர்வமாக வீட்டை திறந்துவைத்ததுடன் பயனாளியிடம் வீட்டிற்கான பத்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டனர்.


புதியது பழையவை