சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

14 மாவட்டங்களில் 620 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அனர்த்தங்களினால் 2 வீடுகள் முழுமையாகவும் 235 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை