இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
மியான்மர் கொடியுடன் கனடா செல்லும் நோக்கில் இவர்கள் சென்றதாகவும் எனினும் நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில், கப்பலின் இயந்திர அறை வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து , கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இதனால் கப்பலில் பயணித்த 303 பேரின் நிலை கேள்விக்குறியானது.
இந்த நிலையிலேயே ஜப்பானிய கப்பலொன்று கபபலில் இருந்தவர்களை மீட்ட நிலையில் அவர்கள் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.