பாடசாலையில் உயிர் இழந்த மாணவன் கிஷானின் சடலம் நல்லடக்கம்

அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் உயிர் இழந்த மாணவன் கிஷானின் சடலம் பிரேத பரிசோதனைகள் பின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருக்கோவில் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய மாணவன் கிஷானின் சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து உயிர் இழந்த மாணவனின் சடலம் தம்பிலுவில் இந்து மைதாணத்தில் நேற்று மாலை 06 மணியளவில் கண்ணீர்மல்லக சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 08 கல்வி கற்று வந்த இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறித்த மாணவன் உயிர் இழந்ததுடன் சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்ட நிலையில் குறிந்த மாணவன் தலையில் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிர் இழந்து இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளனர்.

உயிர் இழந்த மாணவனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் பிரமுகர்கள் உற்பட பெரும் எண்ணிக்கையான பிரதேச மக்கள் கண்ணீர் மல்லக கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை