ஆசிரியரின் மிருகத்தனமான தாக்குதலில் - மாணவனின் செவிப்பறை கிழிந்தது

பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவன் ஆசிரியரின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான்.

கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் பௌத்தம் கற்பிக்கும் ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவன் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து பெற்றோர் மாணவனை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவரொருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை தடிகளால் பல முறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அடித்துள்ளார்.
புதியது பழையவை