தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் சற்றுமுன் ஆரம்பமானது.
முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.
மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் இடங்களின் பதிவுகள் வருமாற
எள்ளங்குளம் மாவீரா் துயிலுமில்லம்
யாழ்.வடமராட்சி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா்.
வழக்கம்போல் 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகைச் சுடாினை மேஜா் சோதியா (சோதியா படையணி) அவா்களுடைய தாயாா் ஏற்றிவைத்தாா்.
தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஒலிக்க ஈகையோருக்கான ஈகைச் சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா் மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
வழமைபோலவே இலங்கை பாதுகாப்புத் தரப்பின் அடாவடிகளும் ஒடுக்குமுறைகளும் ஆங்காங்கே இடம்பெற்ற போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.