நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாளை மறுதினம் அல்லது திங்கட்கிழமை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்றும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
புதியது பழையவை