போரதீவுப்பற்று பிரதேசசபை முனைத்தீவு நூலகம் நடாத்தும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் முனைத்தீவு நூலகம் மற்றும் அறிவொளி வாசகர் வட்டம் நடாத்தும் ஒக்டோபர் மாதத்தினை முன்னிட்டு நடாத்தும் வாசகர்களுக்கான போட்டிப்பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிஸ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (17)நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் பிரதேசசபை முனைத்தீவு வட்டார உறுப்பினர் ம.சுசிகரன் கலந்து கொன்டனர்.

இந்த நிகழ்வில் பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் நூலக உதவியாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் வாசகவட்ட உறுப்பினர்கள் கலந்துகொன்டமை சிறப்பம்சமாகும்.

எஸ்.எல்.யு நிறுவனம் அம்பாறை முகாமையாளர் ருதரன் சந்திரப்பிள்ளை அவர்களினால் முனைத்தீவு பொது நுலகத்துக்கு அன்பளிப்பாக நூல்கள் தவிசாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அதிதிகள் உரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் பரிசில்கள் வழங்கப்பட்டனர்.

புதியது பழையவை