பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இலங்கை காவல்துறை பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்(Police Clearance Unit ) பிரிவுக்கு தனியான தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
பொலிஸ் அனுமதிச் சான்றிதழைக் கோரும் பொதுமக்களின் நலனுக்காக இரண்டு தனித்தனியான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவையாவன:
0112- 439185 (நேரடி)
0112 -013500
பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொதுமக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.