திருகோணமலை,கோபாலபுரம் சித்தர் சுவாமி நடராஜா இராஜேந்திரம் அவர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமான சித்தர் சுவாமி நடராஜா இராஜேந்திரம் அவர்களின் திருவுடலம் நேற்று (20)திருகோணமலை இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை,கோபாலபுரம் ஸ்ரீசுந்தர சண்முக வேலவர் ஆலயத்தில் நீண்டகாலம் சமயப்பணியாற்றிவந்த சுவாமி அவர்கள் யுத்த காலத்தில் அப்பகுதி தமிழர்களுக்கு பாதுகாப்பாகயிருந்துள்ளார்.
அத்துடன் சுனாமி நேரத்தில் கடல் அலையில் இப்பிரதேசம் பாதிக்கப்பட்டபோதும் குறித்த ஆலயம் மட்டும் பாதிக்கப்படாத அதிசயம் நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.