வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (08) தெரிவித்தார்.
இலங்கையர்கள் குழு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், சர்வதேச குடியேற்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.