மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்திற்கும்,எழுவாங்கரைப் பிரதேசத்திற்கும் இடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக அமைவது மட்டக்களப்பு வாவியை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஓடத்துறைப் படகுப்பாதையாகும்.
இப்போக்குவரத்து மார்க்கத்தினூடாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச, மற்றும் அரச சார்பற்ற, ஊழியர்கள், வியாபாரிகள் பொது மக்கள் எனப்பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
இப்படகுப்பாதை தற்போதைய நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடுவதனால் அதில் பயணம் செய்யும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாக அங்கலாய்க்கின்றனர்.