முல்லைத்தீவில் - மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஸ்வமடு உடையார்கட்டு சந்தியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த 4 மாவீரர்களின் தாயாரான எல்லைப் படை வீராங்கனை ஜோசப் முனியம்மா அவர்களினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஈகைச் சுடரினை உடையார்கட்டு முதலாவது மாவீரரின் தந்தையான சுப்பிரமணியம் ஐயா, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத் திரு வேலன் சுவாமிகள் வட கிழக்கு முன்னேற்ற கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட சமுக பற்றாளருமான குருசுமுத்து வி.லவக்குமார், ஏ.ஜோன்சன் மற்றும் சமூக பற்றாளர் கவிதா ஆகியோர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

உயிர்த்தியாகம்
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உடைகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது வழங்கப்படும் தென்னங் கன்றுகளை தங்களது பிள்ளைகளாகவும் உறவுகளாகவும் நினைத்து வளர்க்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது.

புதியது பழையவை