க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தை பெற்றுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடம்
வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண கல்வி திணைக்களத்தினால் வலய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தினை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் அவ்வலயத்தில் மொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய 2056 மாணவர்களில் 1789 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் இதனுள் 128 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
எனவே குறித்த சாதனைக்கு ஒத்துழைத்த வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.