வாயு துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் மரணம்!

வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் கதிர்காமம் – தெடகம பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை