தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள விசேட அதிரடி படையினர் தொடர்ச்சியான பல தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தலைமையில் உணர்வெழுச்சியுடள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.