கெக்கிராவ மாமினிய ரம்பேவ பிரதேசத்தில் உள்ள தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனேவல்பொல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரிட்டிகல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த சுமார் 9 அடி உயரம் கொண்ட 25 முதல் 30 வயதுடைய காட்டு யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானையின் பிரேதப் பரிசோதனையில், மின்சாரம் தாக்கி இறந்தது என தெரியவந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உணவு தேடி கிராமத்திற்குச் சென்றபோது தனது தோட்டத்தைச் சுற்றி கட்டியிருந்த அனுமதியற்ற மின் வேலியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நபர் ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவு தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.