மட்டக்களப்பு கலைஞர்களின் ‘யாளி’ திரைப்படம் தென்னியாவில் திரையிடப்படவுள்ளது

மட்டக்களப்பு கலைஞர்களினால் மட்டக்களப்பில் தயாரிக்கப்பட்ட ‘யாளி’ திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தென்னிந்தியாவில் திரையிடப்படவுள்ளது.

கனடாவினை தலைமையகமாக கொண்டுள்ள அப்லர் எச்.டி.கனடா என்னும் ஊடக நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தென்னிந்தியாவில் திரையிடப்படவுள்ளது.

தென்னிந்தியாவின் சென்னை,சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் டிஜிடல் பில்ம் லபில் இந்த திரைப்படத்தினை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 06.00மணிக்கு இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள்,நடிகர்கள்,நடிகைகள்,திரையுலக பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சுந்தரமூர்த்தி பரணிதரனின் பரணி சினிகம் நிறுவனத்தின் தயாரிப்பில் டக்ஸான் கிருஸ்ணாவின் கதை,வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள யாளி திரைப்படம் மட்டக்களப்பில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளைப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு கலைஞர்களின் குறித்த திரைப்படம் முதன்முறையாக தென்னிந்தியாவில் திரையிடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


புதியது பழையவை