சந்திரகாந்தனும், சாணக்கியனும் பாராளுமன்றத்தில் மோதிக்கொள்வதை நிறுத்த வேண்டும் - இரா.துரைரெட்னம்

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் பாராளுமன்றத்தில் தங்களுக்குள் மோதிக்கொள்வதை விடுத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மாகாணசபை முறைமையினை அமுல்படுத்த தமிழ் தலைமைகள் விடாமுயற்சியை முன்னெடுக்கவேண்டும் என்று இதன்போது கோரிக்கையினை முன்வைத்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை