07 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 07 கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிட தேர்தல்கள்
ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சி, தெவன பரபுர , இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பஹஜன வியத் பெரமுன, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளன.