இலங்கையில் இவ்வருடம் 411 பேருக்கு 'எயிட்ஸ்' தொற்று!


வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாலியல் நோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கலாநிதி றெகான் மற்றும் வவுனியா பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியந்த பட்டகலு ஆகியோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மருத்துவ கலாநிதி றெகான் தெரிவித்ததாவது:-

"நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு இதுவரை 411 பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கில் இந்த ஆண்டு 4 பேர் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கில் எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் இவ்வருடம் 411 பேருக்கு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த ஆண்டு தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவரும் 30 வயதுடையவர்கள்" - என்றார்.

இது தொடர்பில் மருத்துவர் பிரியந்த பட்டகலு தெரிவித்ததாவது:-


"எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட பின்னர் சுமார் 4 ஆண்டுகளுக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதன் ஊடாக தொற்றின் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும்.


ஆனால், பெரும்பாலானவர்கள் நோய் முதிர்ச்சியடைந்த நிலையிலேயே அடையாளம் காணப்படுகின்றனர்" என்றார்.
புதியது பழையவை