மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் காலமானார்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்கள் நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக தெரிசெய்யப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பிரதேசசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்த யோகநாதன் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் சிறந்த முறையில் பிரதேசசபையினை வழி நடாத்திவந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை