சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு இன்று (26-12-2022) நினைவு கூரப்படுகின்றது.நாடெங்கிலும் இந்த நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 18வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு,திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா
ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.