மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அமரர் தவராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சனிக்கிழமை மாலை  மட்டக்களப்பு பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் குடும்ப உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது நினைவுரைகள் நடைபெற்றதுடன் அன்னாரது அரசியல் குறித்த கருத்து பகிர்வுகளும் இடம்பெற்றது.

புதியது பழையவை