தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதாகயிருந்தால் குழந்தைப்பிள்ளைத்தனமான செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கைவிடவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி அவர்கள் யாருக்கும் வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மிருக வதை சட்டங்களை கடுமையாக கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.