மட்டக்களப்பு - கரடியனாறு, கால்நடைவள திணைக்களத்தில் பணியாற்றும் மிருக வைத்திய அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளே குறித்த வைத்தியரை கைது செய்துள்ளனர்.
இழுப்படிச்சேனை எனும் இடத்தில் உள்ள கால்நடைப்பண்ணை ஒன்றில் பசு ஒன்றுக்கு ஊசி ஏற்றுவதற்காக 26,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறி இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.