கடந்த ஒரு வருடத்தில் அறுவடை செய்யப்பட்ட அரிசியை கால்நடை தீவனத்திற்காக எடுத்துச் சென்ற போதே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தும் நோக்கில் அரிசியை கால்நடை தீவனமாக மாற்றும் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த அரிசியை எடுத்துச் செல்லும் போது, மின்னேரிய நகரில் வைத்து பொலிஸாரால் அரிசி கையிருப்பு கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து, நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உரிய கையிருப்பு அரிசியை ஆய்வு செய்த போது, கடந்த அறுவடையில் பெறப்பட்ட அரிசி எனத் தெரியவந்துள்ளது.
25,000 கிலோ அரிசியுடன் இந்த லொறி மற்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.