அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தை சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கல்வின் விஜயவீர என்ற கொழும்பில் பிறந்த மாணவரே வியாழனன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த கல்வின்விஜயவீர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பெண்
வான் ஒன்றுடன் மற்றுமொரு வாகனம் மோதியே விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் 90 வயது பெண்ணொருவர் செலுத்திய மிட்சுபி லான்சர் செடான் வாகனம் இன்னுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.