தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் - பகிரங்க அறிவிப்பு



அடுத்த ஆண்டுநடைபெறவுள்ள உள்ளுராட்சி, மற்றும் மாகாணசபை தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி கிழக்கு மாகாணம் பூராக போட்டியிடுமென அக் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளளார்.

அவர் இந்த விடயத்தை ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவர் சி.சந்திரகாந்தனின் தூரநோக்குக்கு அமைய தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைய அம்பாறை, மற்றும் திருகோணமலையில் வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்ககாக 2018ம் ஆண்டு பொது அமைப்புக்களும் தேசிய கட்சிகளும் பேசியதற்கு அமைவாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதிலும் நாம் அங்கு தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆனால் 2018 வருடம் வெற்றிபெற்றிருந்த தேசிய கட்சிகள் திருகோணாமலையிலும் அம்பாறையிலும் கடந்த நாண் கரை வருடங்களில் என்ன செய்துள்ளார்கள் என்ற ஏக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு இருக்கின்றது.


அதனை நிவர்த்தி செய்வதற்க்காக மட்டு, அம்பாறை, திருகோணமலை போன்ற மூன்று இடங்களிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பாரிய வெற்றியை எமது கட்சி பெறும் என்பதை மக்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தேர்தல்கள் தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்க படவேண்டும் என்றால் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாத கரணத்தால் அரச அதிகரிகள் முதல் மக்கள் வரை மிக அசோகரியப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.


நல்லாட்சிகாலத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழுத்தடிப்பு செய்துவிட்டு தற்போது முதலை கண்ணீர் விடுகின்றனர்.


கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் மக்களை ஏமற்றிவருகின்றனர். ஆகவே எதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகணம் பூராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போட்டியிடும் என தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை