மட்டக்களப்பில் ஆழிப்பேரலை உயிரிழப்பு - அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி


கடந்த 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் இலங்கையின் கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் காணாமல்போய், பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தைக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

இதனால் அபிலாஷ் அன்றிலிருந்து 'சுனாமி பேபி' என்றே அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர், மரபணு பரிசோதனை மூலம் அந்த குழந்தை மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராசா தம்பதியின் மகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அபிலாஷுக்கு 18 வயது ஆகின்றது. அவரது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அபிலாஷ் இன்று(26-12-2022) தனது பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதியது பழையவை