மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு



மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் சேவை நலன் கௌரவிப்பும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை எந்திரி நாகரெட்ணம் அனோஜன் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவை நலன் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஊழியர் நலன்புரிச்சங்க போசகரும் ,மாகாண பணிப்பாளருமான எந்திரி குணசேகரம் சிவகுமார் , பிரதம பொறியிலாளர் பொன்னையா பரதன் நிறைவேற்று பணிப்பாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள், சிரேஷ்ட கணக்காளர் ,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்ட புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்தியை பெற்ற ஊழியர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றி ஓய்வுபெற்று செல்லும் ஊழியர்களின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியில் இருந்து விலகி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்ற உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர் .

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவை நலன் பாராட்டு நிகழ்வில் உத்தியோகத்தர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு ஸம்பிகா ஜெயராமனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை