இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இந் நாளை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடணப்படுத்தியுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு நிகழ்வு இடம்பெற்றது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியாகின்றதை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஈகை சுடர் ஏற்றி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியிலும் இடம் பெற்று வருகின்றது.
சுனாமி அனர்த்தத்தினால் சுமார் 35,000 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 5000 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலாதி அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர் பலர் கலந்து கொண்டனர்.