போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொல்பொருள் எல்லை கல் இடுவதற்கு ஆயத்தம் - மக்கள் எதிர்ப்பு



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 26 இனம் காணப்பட்ட இடங்களில் இருந்து முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 12 இடங்களுக்கு இன்று (12-12-2022) முதல் 15 நாட்கள் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தால் எல்லை கல் இடும் நடவடிக்கையை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
பொது மக்களினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு தெரிவித்ததற்கு இணங்க குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் போரதீவு பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் தேசிய ஆர்வலர்கள் என பலரும் நேரடியாக பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளர் அவர்களிடம் இவ்விடையம் சம்மந்தமாக வினவியபோது.

அவ்விடையங்கள் உண்மை என கூறியதற்கு இணங்க குறித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நீங்கள் தற்போது எங்கே நிற்கின்றீர்கள் என்று கேட்டு அவர்களை நேரடியாக பிரதேச செயலாளர் அறைக்குள் அழைத்து அவர்களிடம் மேற்படி தொல்பொருள் ஆய்வு சம்பந்தமாக வினவிய போது.

கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமது திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூபாய் 1.5 மில்லியன் பணத்தில் ( குறிப்பாக போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இனம் காணப்பட்ட இடங்களுக்கு உரிய தொல்பொருள் ஆய்வு நடு கல்) குறித்த இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடு கல் இடுவதற்கு ஆயத்தமாக வந்ததாகவும் அதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை தமது ஒத்துழைப்பாக சுமார் 54 பேரை கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் குறித்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்நடவடிக்கையை முற்றாக எதிர்பதாகவும் இது எமது நிலம், எமது முன்னோர்கள் ஆண்டு பராமரிப்பு செய்த தனி தமிழ் பிரதேசங்கள் ஆகையால் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு நீங்கள் பாதுகாப்பு தரப்பினருடன் மக்களின் இடங்களில் நடுகல் இடும் போது மக்கள் அதனை தடுக்க ஆர்ப்பாட்டம் செய்து இதனை தடுப்பார்கள் அவ்வேளையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்படும்.

மக்கள் பொருளாதார பின்னடைவு காரணமாக பலவகையிலும் பின்னடைவை எதிர் நோக்கி இருக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்வது இனமுறன் பாட்டை தோற்று விக்கும் ஆகையால் இவ்வாறு தமிழ் பிரதேசங்களில் எல்லை கல் இடுவதை உடனடியாக இடைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய மேற்படி கல் இடும் நடவடிக்கையை தற்காலிகமாக குறித்த அதிகாரிகள் தடைசெய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் இது சம்பந்தமாக குறித்த திணைக்கள அமைச்சருடன் கலந்துரையாடல் செய்வதாகவும் மக்களுக்கு தெரிவித்து வேத்துச்சேனை மற்றும் நாதனை கல்லடி பிள்ளையார் வெல்லாவெளி இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அங்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நின்ற மக்களுடன் கலந்துரையாடல் செய்து மக்களுக்கு தெளிவூட்டி சென்றார்.



புதியது பழையவை