தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவரும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான மகாதேவன் ஜெயக்குமரன் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ (சுயசரிதை) ‘மழைக்கால இரவுகள்’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார்.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான மகாதேவன் ஜெயக்குமரனின் மறைவு தமிழ் உணர்வாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.