முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!



முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.விமலநாதன் அறிவித்தார். 

மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 5 கட்சிகளினதும், ஒரு சுயேச்சைக்குழுவினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
புதியது பழையவை