மட்டக்களப்பில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது



மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுத் தாக்கலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் வேட்புமனுக்கள்
நிரகரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த நிலையில்,
போரதீவுப்பற்றில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காத்தான்குடி நகரசபைக்கான வேட்பு மனுவில் ஐக்கிய காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் சிலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபைக்கான வேட்புமனுவில்
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை