இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்!இலங்கையில் காணப்படுகின்ற 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக இலங்கையின் உயிர் பல்வகைமை செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

2022ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியாக 244 வகையான பறவைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் இத் தகவலை வெளியிட்டுள்ளார். 

அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள் விலங்குகளை பதிவு செய்யும் ஆவணத்தின் தரவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை 435 வகையான பறவையினங்களைக் கொண்ட உயிர்ப் பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடமாக காணப்படுகின்றது.

மனிதர்களால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அழிவடையும் நிலையிலுள்ள பறவை இனங்களை பாதுகாப்பதை முழு சமூகமும் பொறுப்பேற்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை