மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் குப்பையில் வீசப்பட்டிருந்த பெண் சிசுவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வீட்டின் மலசல கூடத்திற்கருகில் பை ஒன்றில் இடப்பட்டு சிசுவின் சடலம் ஒன்று வீசப்பட்டிருந்ததை அயலவர்கள் அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையினையடுத்து சந்தேகத்தின்பேரில் இளம் யுவதியை கைதுசெய்துள்ளனர்.
இன்று அதிகாலை மலசல கூடத்தில் குழந்தையைப் பிரசவித்து மலசல கூடத்தின் காற்றோட்ட வழி ஊடாக வீசியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் சிசுவின்சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.