தென் மாகாணத்தில் ATM இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு வெளிநாட்டவர்கள் பல்கேரிய பிரஜைகள் எனவும் ஒருவர் கனேடிய குடியுரிமை பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தச் சந்தேக நபர்களில் மீஹகதன்ன பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிலையத் தளபதியும் அடங்குவார்.
பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய இரு சந்தேக நபர்களும் எல்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.