இலங்கையில் ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருட்டு கும்பல்!கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.

நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை