லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபணமானால், நட்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியில் பெற்ற 26 பில்லியன் (2600 கோடி) கடன் உட்பட அனைத்துக் கடன்களையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபமீட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு இலாபமீட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதற்கு நிர்வாகத்தினரே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை