“போதையை ஒழிப்போம் மாணவர்களை காப்போம்” - தனி நபர் சைக்கிளோட்டம்



பொத்துவில் ரோயல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “போதையை ஒழிப்போம் – மாணவர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் திருகோணமலை முதல் பொத்துவில் அருகம்பை வரையிலான தனி நபர் சைக்கிளோட்டம் இன்று (11) காலை 6.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சைக்கிள் ஓட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை