புலம்பெயர் தமிழரின் வீட்டை ஆட்டையைப் போட்ட மட்டக்களப்பு அரசியல்வாதி!!புலம்பெயர் நாடொன்றில் நீண்டகாலமாக தமிழ் தேசிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவருகின்ற ஒருவர்.

தாயகத்தில் ஒரு அரசியல்வதிக்காக நிறைய உதவிகள், பிரச்சாரங்கள் செய்துவந்தவர்.

நாட்டுக்குச் சென்றுதிரும்புகின்ற நேரங்களிலெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரியும் அந்த அரசியல்வாதியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றெல்லாம் போட்டோ எடுத்து மூஞ்சிப்புத்தகத்தில போட்டு அழகு பார்த்தவர்.

‘அவர் ஒரு நல்லவர்.. வல்லவர்.. நாலும் தெரிந்தவர்.. மாகாணசபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அந்த அரசியல்வாதியைத்தான் இறக்கவேண்டும்’ என்றெல்லாம் பிரச்சாரம் வேறு செய்துகொண்டு திரிந்தார்.


ஆனால், அண்மைக்காலமாக குறிப்பிட்ட அந்த அரசியல்வாதியை திட்டித் திர்த்துக்கொண்டிருக்கிறாராம் அந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்.


என்ன விசயம் என்று கேட்கப்போக, “..கள்ளன். மட்டக்களப்பு பண்டிங்ஸ் லேனில் இருந்த எனது வீட்டை அவனது கள்ளப்பெண்சாதிக்கு களவாக எழுதிக்கொடுத்துவிட்டான்…’’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

‘அவர் அப்படிப்பட்ட ஆளில்லையே நல்ல மனுசன்தானே..’ என்று கேட்க, “..வேட்டிதான் வெள்ளை.. வேட்டிக்குள்ளே நிறைய அழுக்கு இருக்கு.” என்று கூறிக்கொண்டு தற்பொழுது தேர்தல்ல போட்டியிடுகின்ற அந்த அரசியல்வாதி பற்றி அவர் கூறிய இரகசியங்களைக் கேட்க தலை சுத்தியது.


வாகரையில் அந்த அரசியல்வாதி ஆட்டையைப் போட்ட அரச காணிகள்… அவர் யார் யாரிடம் இருந்தெல்லாம் கொமிசன் வாங்கினார்.. என்பது முதல் அவரது ‘சைடுகள்’ பற்றியும் நிறைய இரகசியங்களை அவுழ்த்துவிட்டார்.

‘நாங்கள் நம்பவில்லை..’ என்றதும் இரண்டு நாட்களில் சில ஆதாரங்களைத் தருவதாகக் கூறினார்.

பிறகென்ன.. இரண்டு நாட்களில் அவர் தருகின்ற ஆதாரங்களுடன் சந்திப்போம்.
புதியது பழையவை